ஞாயிறு, 4 டிசம்பர், 2011

பேர்ல மட்டும் மிச்சம் வச்சோம் நம்ம ஒரவ..!

முண்டி அடிச்சு எனக்கும்
சேர்த்து சாப்பாட்டுக்கு
நிப்பியே பள்ளிக்கொடத்துல.....

ஜன்னலோரம் சீட்டு பிடிச்சு
எனக்கா விட்டு கொடுப்பியே
பஸ்சு ஏறயிலே..

என் மேல உரசிக்கிட்டு
ஊர் கத பேசுவியே
எறங்குற வரையில..

பருவம் திறந்து விட
பாவாடை மறச்சி என்னை
கொண்டாந்து சேத்தியே வீடு வரையில..

கல்யாணம் கட்டாம கடைசி வரைக்கும் இருப்போம்ன்னு கதை
அளந்துகிட்டோமே படிக்கையில..

சொல்லி தான் வாய் மூடல
வருசம் கூட ஒன்னு ஏறல..

கல்யாண சந்தையில கட்டி விட்டாக
நாங்க காணாத தூரமா பிரிச்சி வச்சாக..

பிரிகையில ஒரு தடவ பாத்துகிட்டோம்..

ஒன் பிள்ளைக்கு என் பேரும்
என் புள்ளைக்கு ஓன் பேரும்
வைக்கனும்னு சொல்லி வச்சுக்கிட்டோம்.. .

நெனச்சபடியே பேரு வச்சோம்..
அந்த பேர்ல மட்டும் thaana
நம்ம உறவ மிச்சம் வச்சோம்.. !

வியாழன், 3 நவம்பர், 2011

ஆதலினால் காதல் செய்வீர் ..!

நிமிடங்கள் பேசினால் போதும்

வருடத்திற்கும் வேண்டிய

கவி வார்த்தைகள் கிடைக்கும்...!

.நொடி தனில்

நோக்கினால் போதும்

நினைவுகளே மருந்தாய் மாறும்

அதிசய நோய் வந்து நிலைக்கும்..!

பாதையின்றி பயணிக்கும்

கால்களுக்கு பட்டாம் பூச்சியென

பறக்கும் சிறகு முளைக்கும்..!

வாசமின்றி இருக்கும்

இதயப் பூவிற்கு

புது சுவாசம் கண்டு

மலரச் செய்யும்..!

மரித்து விட்ட தேகமாய் இருக்கும்

வாழ்வையும் மகிழ்ச்சி வெள்ளத்தில்

நீந்த செய்யும் ...!

உனக்குள்ளே உரக்க

சிரிக்க வைக்கும்

காதலை பெறுவது சுலபமில்லை..!

பெற்றுவிட்டால். வானம் கூட

தொட்டுவிடும் எல்லை ...!

ஆகையினால் காதல் செய்வீர்...

பிழை ஒன்றும் இல்லை..!

செவ்வாய், 1 நவம்பர், 2011

கல்லறை சுகம் தேடி...!

உனக்கும் எனக்குமான

இடைவெளியை இன்றுவரை

காதல் நிரப்பிக் கொண்டிருக்க...!

ஞாபகங்கள் சிறகு முளைத்து

என் உயிர் வானை

அளந்து கொண்டிருக்க...!

தெரியாமல் நான்

நழுவ விட்ட கணங்களையும்...

தெரிந்தே என்னை

தவறவிட்ட ரணங்களையும்...

காலங் கடந்தும்

நினைத்து கதறுகிறேன்...

கணத்த இதயத்தோடும்.. ..

கல்லறை சுகம் தேடி

பயணப்படுகிறேன்..

வெற்றிடமாகி விட்ட வாழ்வோடும்..

வியாழன், 20 அக்டோபர், 2011

என் காதலின் உருவம் தான் கணவனோ...!. .

மனதோடு மயக்கிய மணாளனே

மணமேடையில் உன்

கரம் பற்றவே..

நான் மன்றாடிய

கதைகள் ஆயிரம்..!

நீ மட்டுமே வேண்டுமென

அடம் பிடித்து கொண்ட

அறப்போராட்டம்.. !

அத்தனையும் அணு அணுவாய்

நெஞ்சில் சுமக்கிறேன்..

எனை அரவணைக்கும்

உந்தன் மேல்

கொண்ட ஆசை மாறாமல்..!

சிறப்பாய் எல்லாம் செய்தும்

சில நேரம்

சினம் கொள்கிறேன்..

நீ ஆறுதல் சொல்லும்

அழகை காணவே...!

.இன்று உன்னால்

நான் தாய்மை அடைந்த போதும்

நானே உன் சேயாய்.. !

தந்தை என

நீ மாறிய போதும்

என்றும் நீயே என் தாயாய் .. !

எனை நெஞ்சில்

சுமந்து விடு போதும்..!

உனதவளாய் பிறப்பெடுப்பேன்.. ..

ஜென்மங்கள் அனைத்தும்

வல்லமை தாராயோ.....!

உலகத்தின் காதலை

எல்லாம் உள்ளத்தில்

சேமித்தேன் உனக்கென..!

புரியாத மொழியை

எல்லாம் அறிந்து கொண்டேன்

புதுமுறையில் காதலை சொல்வதற்கென...!

ஓளி தருவாய் எனும் நம்பிக்கையில்

வழிப்பாதையில் நிற்கிறேன்....

நீ வருவாய் என.. .!

எல்லாம் சரியாய் செய்தும்

எப்போதும் போல்

எதிரில் நிற்க மலைக்கிறேன்....!

.இன்று வரை

உன் விழிப்பார்வை

எதிர் நோக்கும்

வல்லமை இல்லாமல்.....! .

சோதனை கூடத்தின் எலியானேன்..

வாளினும் வலியதாய்

உன் விழிகள் இருக்கலாம்..

அதனை பரீச்சித்து பார்க்க..

என் இதயம் தானா

கிடைத்தது உனக்கு..

தேனினும் இனியதாய்

உன் வார்த்தைகள் இருக்கலாம்.

கவிதை எழுதி பழக

என் வாழ்க்கை தானா

கிடைத்தது உனக்கு.
.
சோதனைக்கூடத்தின் எலியாய்

என் காதலை சிதைத்து விட்டு

யாரோடு மேடை ஏறினாய்

கல்யாண பட்டம் பெற..

புதன், 19 அக்டோபர், 2011

நடப்பதெல்லாம் உன்னாலே..!

அன்று.. !

நிலவுக்கும் எனக்குமான தூரத்தை

நீ தான் குறைத்தாய்

உன் வருகையால்.. ..!

தொடக்கத்திற்கும்

முடிவிற்குமான என் வாழ்வை

நீ தான் கணக்கிட்டாய்..

உன் காதலால்....!

உணர்வுக்கும் உள்ளத்திற்கும்

புரியாததொரு துடிப்பை கொடுத்தாய்

உன் கண்களால்...!

இன்று..!

என் உடலுக்கும்

உயிருக்குமான தொடர்பை

நீ தான் துண்டிக்கிறாய்..

உன் பிரிவால்.. !


மலருமா அந்த நாட்கள்....?

சிநேகமாய் புன்னகைத்து

உள்ளத்தில் சங்கமமாகிய நாட்கள்..

உனக்கென்ன காத்திருந்து

கைகோர்த்த பழகிய நாட்கள்..

மற்ற நிகழ்வுகள் மறந்து

உன் நினைவோடு

சுற்றி திரிந்த நாட்கள்..

முகம் தூக்கி பார்த்து

பரவசமடைந்த மழை நாட்கள்..

அத்தனை நாளுக்கும்

முற்றுப்புள்ளியாய் அமைந்ததடி..

நம் திருமண நாள் ....

ஏக்கங்கள் வளர ..

நியாபகங்கள் தொடர.

.மீண்டும் மலருமா அந்த நாட்கள்..

செவ்வாய், 18 அக்டோபர், 2011

காதலும் கற்று நட..

 

காதல் கொண்டு

உன் பின்னே அலைவதால்

சாமானியனாய் எண்ணி சாடுகிறாய்..

காவியங்கள் பல

சாமானியனின்

காதலை தான் சுமந்தன

என்பதை மறந்துவிட்டாய் . .

மதம் கண்டு

மனமில்லை என்கிறாய் ..

வண்டுக்கும் பூக்களுக்கும் நடுவே

காற்று தடையில்லை ..

அது போலவே மதமும்..

வார்த்தைகள் தராமல்

சில நேரம்

கடந்து விடுகிறாய்... ....

மௌனத்தை மொழி பெயர்க்க

மனிதர்க்கு கற்று தந்தது

காதல் தான் என்பதை

நீ அறிந்திடவில்லை.. .

கல்யாணத்திற்கு பின் காதல்

என்பது உன் வாதம்..

.நீ கல்லறை போனாலும் கைவிடாது

என்பது காதலின் வேதம்..

இறுதியாய் ஒன்று

. மறித்து விட்ட மனிதத்தை

மலர வைக்கும் காதலை..

.கற்று நட ஒரு முறை .. .

வானளவு வெற்றி குவியும்

இனி எப்போதும் எம்முறை..

கை விட்ட காதல்.....!



அன்று...!

கவிதை பூக்கள் தொடுக்க வைத்து

இன்று கண்ணீர் பூக்களை

பரிசாய் கொடுத்தவளே..

காதல் எனும் அகராதிக்கே

புது களங்கம் கர்ப்பித்தவளே..

எவரும் புரிந்திடா வண்ணம்

காதலை..

புதுமையாய் காய படுத்தியவளே..

உலகையே காக்கும் காதல்..!

என்னை மட்டும் கைவிட்டதே...

ஒரு வார்த்தை...

முன்பே கூறி இருந்தால்

மனமுவந்து தாரை வார்த்திருப்பேனடி

என் உயிரை ..


அதை விடுத்து

எனை உயிரோடு கொல்ல

காதல் எனும் ஆயுதம் தானா கிடைத்தது

உனக்கு.....

மறக்க முடியவில்லையடி..!



மறக்க முடியவில்லையடி..!

உன் நியாபகத்தின் வேதனைகளை

மறந்து விடு

என நீ சொல்லிய அந்த ஒருமுறை

இன்றும்

ஒரு கோடி முறையாய்

என் காதில் ஒலிக்கிறதடி
..
காதல் எனும் புனித பயணத்தில்

எனை நீ இணைத்த போது

நான் மறுத்திருக்க வேண்டும்..

தவறவிட்ட அந்த தருணத்தின்

தண்டனை தான்

இன்று உன் பிரிவை எண்ணி

தவமிருக்கிறேன்..

உன்னை பார்த்த முதல் தருணம்

நியாபக படுத்திக் கொள்..!

ஒரு பார்வை

ஒரு முறை தான் பார்த்தாய்..!

அவ்வளவுதான்

பற்றிக்கொண்டன என் கண்கள்

கண்ணில் பற்றிய தீ

உடலெங்கும் பரவி எனை சூறையாடியது.

. ஏன் அப்படி பார்த்தாய்...

அதுவும் இப்படி

எரிந்து சாம்பலாகும் அளவிற்கு..!

நீ கடந்து போகும் போது

உன்னை தூர நின்று

தரிசிக்கிற கும்பலில்

ஒருவனாகவே இருந்து விட நினைத்தேன்

நீ விடவில்லை

பற்ற வைத்த தீக்குச்சியாய்

எனக்குள் ஏற்றி வைத்த

எண்ணங்களோடும் எரிகின்ற

மெழுகுவர்த்தியாய்

நானாகி போக

நீ அந்த தீபத்தில்

ஒரு தேவதையாய்

தோன்றி என் நினைவுகளை

ஆரத் தழுவினாய் ..இப்படி..

என் இதயத்தின் வாசலை

பார்வையால் திறக்க தெரிந்த உனக்கு

அதை அடைப்பதற்கு

உன் சுட்டெரிக்கும்

வார்த்தை தானா கிடைத்தது ..

உன் வானில் மின்னிடும் நட்சத்திரமாய்

நானிருக்க கண்ட கனவுகள்

களைந்து போனாலும் வானவில்லாய்

சில தருணம் வாய்ப்பு தந்தாயடி..!

போதும் அந்த வாழ்வு

என விலகி கொண்டேன்..

ஆயினும்

மறக்க முடியவில்லையடி..

உன் நியாபகத்தின் வேதனைகளை

உனக்குள் எனை இழந்த சோகத்தினை.

மறக்கமுடியவில்லையடி.. !.

ஜனநாயக தேசத்தில் நாம்..

கவிதை தலைப்பு: ஜனநாயக தேசத்தில் நாம்..

பூனைக்கு ஞானம்

வந்தது அறியாமலே..

சந்தேக எலிகளாய்.....

கிடைக்குமோ,கிடைக்காதோ

என அலைகின்றோம்.....

உரிமைகளை பெற

பிறந்த நாட்டில்......

முன் தினம் பெற்ற

செஞ்சோற்று கடனக்கு

வாழ்வையே அடகு வைக்கிறோம்

எதோ ஒரு

அரசியல் கட்சி வாழ...

பெருமைக்காக நாயை

காரில் வைத்து பவனி வருகிறோம்..

சாவுக்கு போராடும் மனிதனை

சாலையிலே விட்டு செல்கிறோம்

சட்ட பிரச்சனைக்கு பயந்து..

நோயால் முடியாத

மரணத்தை எல்லாம்..

நமக்கு தந்து கொண்டிருக்கிறது

மருந்துகள் தன் பங்கிற்கு..

பொருளை தேடி..

மக்களோடு மக்களாய்..

நாம் அலைய

நம் மழலைகளுக்கு

மனிதத்தை சொல்லித்தருகிறது..

விலங்கின் வடிவில் கார்டூன்கள்.. ..

அதுவும் ஒரு பாடம்

..
அது ஒரு

இருவழி நெடுஞ்சாலை...

வாகனங்கள் முந்திக்கொண்டும்

உரசிக்கொண்டும் போகிறது..

தவறி விழுந்த படி கிடக்கும்

நாயாகட்டும்..,

மனிதனாகட்டும்..,

யாருக்கும் நின்று பார்க்க நேரமில்லை

நிற்பதற்கு மனமில்லை ...

எந்த வாகனமும் பொருட்டில்லை

கனரக வாகனத்திற்கு...

.கனரக வாகனத்தையும்

முந்தி செல்ல

அவசரம் காட்டுகிறது

இரு சக்கர வாகனம்...

அவசரம் காட்டுபவர்கள்

எல்லோரையும்

ஓரிடத்தில்

சற்று நிக்க வைத்து விட்டே செல்கிறது...

பொறுமையாய்

ஒரு மாட்டு வண்டி

முன்னே.. !

வயக்காட்டில் ஒரு வேதனை..

  வயக்காட்டில் ஒரு வேதனை..

தூளி ஆட்ட எப்போதும்

தாய் வேண்டுமென

குழந்தையின் அழுகும் வேதனை...

வரப்பில் வேலை நடக்க

குழந்தையின் அழுகை

நிற்க வேண்டுமென

தாயின் பிரார்த்தனை..

இதில் எதை நிறைவேற்ற

வழக்கம் போல்

குழப்பத்துடன்

அருகே அரசமர

பிள்ளையாரின் தோரணை..

என்னவனின் இதழ் தந்த பரிசு..

எவரும் தீண்ட முடியா

வரிகளை கொண்டு

எனை கவி எழுத சொன்னான்

என் காதலன்..

சாத்தியமில்லை என சாடித்தேன்..

முயற்சி செய் காத்திருக்கிறேன்

என முடிவாய் சொன்னான்.

.சொல்லிவிட்டால் என்ன தருவாய்

என வினவினேன்.

.சொல்லிய கவிதைக்கு

பரிசு நிச்சயம் என்றான்.

.அவன் சொல்லி

வாய் மூடும் முன்னே..

"உன் இதழில்

இறைவன் எழுதிய

வரிக்கோடுகள் தான்

என் காதல் தேசத்தின்

எல்லை கோடுகள் "

புரியாமல் புருவம் உயர்த்தினான்..

உன் இதழை எனையன்றி

யாரால் தீண்ட முடியும்

என குறும்பாய் பார்க்க

சொல்லியபடியே பரிசு தந்தான்

அவன் இதழ் கொண்டு..

வாழ்கையும் கவிதை..

வாழ்கையும் கவிதை..

வார்த்தைகளை போலவே..

வாழ்கையும் கொட்டிக்கிடக்கிறது

ஒழுங்காய் நடை அமைத்தால்.. ..

வாழ்க்கை ஆகும் கவிதை.

. நம்பிக்கையோடு வடிவமைத்தால்..

கவிதையை விட

அழகாகும் வாழ்க்கை..... .

மலரும் நினைவுகள்...!



என் வயதோடு

கடந்து போன

நிகழ்வெல்லாம்

உன் நினைவோடு

இன்றும் புத்துயிராய்

நடை போடுகிறது.....

என் நட்பே நீ

அருகில் இல்லாத போதும்.

விதி கண்டு நடுக்கமென்ன

விதி கண்டு நடுக்கமென்ன..

எதுவும் சொல்லலாம்

வெறும் வார்த்தை தானே.

.முயன்று முயன்று

மூச்சு திணறிய கதை

ஆயிரம் உண்டெனக்கு...!

என விதி கண்டு

தலை மேல் கை எதற்கு..!

வாழ்வோடு என்ன

தடுமாற்றம் உனக்கு..!

கருப்பையில் இருந்து

முட்டி மோதி

வெளிவந்தவன் தானே

உலகத்தை பார்க்க..!

விரல் காயத்திற்கு பயந்தால்

மலரை எப்படி பறிக்க....!

ஊசி முனைக்கு பயந்து

மருந்தை மறுத்தால்..

மானுடத்தை எப்படி குணமாக்க.. !

தொடர் முயற்சி

தோற்காது உனக்கு..

எல்லை கொடுக்காதே காலத்திற்கு..!

முதுகெலும்பு உள்ளவரை

முயற்சி செய்....

முடிவுக்கு வராத

வழக்குகள் பூமியில்

ஒருபோதும் இல்லை..

வெள்ளி, 7 அக்டோபர், 2011

உன் நினைவுகள்...!

எப்போதும் நியாபகத்தில்

 வராத மூக்கு

கண்ணாடியை போலவே

 உன் நினைவுகளும்

 இருந்திருக்க கூடாதா

 எனக்குள்..

தீதும் நன்றும் பிறர் தர வாரா..!

: தீதும் நன்றும் பிறர் தர வாரா ..

மனதோடு நீ விதைத்த

ரணங்கள் தான்

சிகரமேற எனக்கு ஆதாரமாய்.. !

வாழ்வோடு

நீ குத்தி சென்ற

முட்கள் தான்...

என் வீட்டு பூக்கள்

நிறம் மாற காரணமாய்....!

நீ கொடுத்து சென்ற

வார்த்தைகள் தான்

இங்கு கவி வரைய காரணமாய்.....!

. கதேலேனும் சிறகை

நீ முறித்த பிறகே...... ..

முரண்பாடாய்

வானம் வரை பறக்க எத்தனித்தேன்...!

.நேசமெனும் கனவை

நீ சிதைத்த பிறகே

எதிர்மறையாய்..
.
விருட்சதிற்காக விதைக்க துணிந்தேன்..!

நீயின்றி அணுவும் அசையாது

என்றிருந்தேன்.....!.

இன்று உன் நிழல்

கடந்த பின்தான்

நிஜமாய் வாழ துடிக்கிறேன் ....!

பழி வாங்க நீ தந்த

தோல்வி தான் என் பாலமானது....

தீதும் நன்றும் பிறர் தர வாரா

இதுவே என் வேதமானது . ...!