வியாழன், 3 நவம்பர், 2011

ஆதலினால் காதல் செய்வீர் ..!

நிமிடங்கள் பேசினால் போதும்

வருடத்திற்கும் வேண்டிய

கவி வார்த்தைகள் கிடைக்கும்...!

.நொடி தனில்

நோக்கினால் போதும்

நினைவுகளே மருந்தாய் மாறும்

அதிசய நோய் வந்து நிலைக்கும்..!

பாதையின்றி பயணிக்கும்

கால்களுக்கு பட்டாம் பூச்சியென

பறக்கும் சிறகு முளைக்கும்..!

வாசமின்றி இருக்கும்

இதயப் பூவிற்கு

புது சுவாசம் கண்டு

மலரச் செய்யும்..!

மரித்து விட்ட தேகமாய் இருக்கும்

வாழ்வையும் மகிழ்ச்சி வெள்ளத்தில்

நீந்த செய்யும் ...!

உனக்குள்ளே உரக்க

சிரிக்க வைக்கும்

காதலை பெறுவது சுலபமில்லை..!

பெற்றுவிட்டால். வானம் கூட

தொட்டுவிடும் எல்லை ...!

ஆகையினால் காதல் செய்வீர்...

பிழை ஒன்றும் இல்லை..!

செவ்வாய், 1 நவம்பர், 2011

கல்லறை சுகம் தேடி...!

உனக்கும் எனக்குமான

இடைவெளியை இன்றுவரை

காதல் நிரப்பிக் கொண்டிருக்க...!

ஞாபகங்கள் சிறகு முளைத்து

என் உயிர் வானை

அளந்து கொண்டிருக்க...!

தெரியாமல் நான்

நழுவ விட்ட கணங்களையும்...

தெரிந்தே என்னை

தவறவிட்ட ரணங்களையும்...

காலங் கடந்தும்

நினைத்து கதறுகிறேன்...

கணத்த இதயத்தோடும்.. ..

கல்லறை சுகம் தேடி

பயணப்படுகிறேன்..

வெற்றிடமாகி விட்ட வாழ்வோடும்..