திங்கள், 9 ஏப்ரல், 2012

ஒரு காரணத்தை எப்படி வெளியில் சொல்வேன்..!

விழித்தெழும் ஒவ்வொரு
இரவு வேளையிலும்
ஒவ்வொரு கனவு ..

விஷமுள்ள நாகம்
யாரையோ தீண்டுவதாய்.

நரி ஒன்று
ஊருக்குள் ஊளையிடுவதாய்..

குரங்கு ஒன்று
எதையோ பறித்து போவதாய்..

யானை ஒன்று
பயமுறுத்தி துரத்துவதாய்.

நான் கண்ட
ஒவ்வொரு கனவிற்கும்
பயந்தபடியே பல காரணங்களை
சொல்கிறாள் அம்மா..

அத்தனையும் என்
ஒற்றை குணம்
என்பதை நான்
எப்படி வெளியில் சொல்வேன்..?

1 கருத்து:

  1. !!!!!!!!!!!!!!!!!!!!!குணம்!!!!!!!!!!!!!!!!!!!

    சில நேரம் ஆச்சரிய குறிகளோடு
    சில நேரம் கேள்வி குறிகளோடு...

    பதிலளிநீக்கு