செவ்வாய், 18 அக்டோபர், 2011

என்னவனின் இதழ் தந்த பரிசு..

எவரும் தீண்ட முடியா

வரிகளை கொண்டு

எனை கவி எழுத சொன்னான்

என் காதலன்..

சாத்தியமில்லை என சாடித்தேன்..

முயற்சி செய் காத்திருக்கிறேன்

என முடிவாய் சொன்னான்.

.சொல்லிவிட்டால் என்ன தருவாய்

என வினவினேன்.

.சொல்லிய கவிதைக்கு

பரிசு நிச்சயம் என்றான்.

.அவன் சொல்லி

வாய் மூடும் முன்னே..

"உன் இதழில்

இறைவன் எழுதிய

வரிக்கோடுகள் தான்

என் காதல் தேசத்தின்

எல்லை கோடுகள் "

புரியாமல் புருவம் உயர்த்தினான்..

உன் இதழை எனையன்றி

யாரால் தீண்ட முடியும்

என குறும்பாய் பார்க்க

சொல்லியபடியே பரிசு தந்தான்

அவன் இதழ் கொண்டு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக