செவ்வாய், 18 அக்டோபர், 2011

விதி கண்டு நடுக்கமென்ன

விதி கண்டு நடுக்கமென்ன..

எதுவும் சொல்லலாம்

வெறும் வார்த்தை தானே.

.முயன்று முயன்று

மூச்சு திணறிய கதை

ஆயிரம் உண்டெனக்கு...!

என விதி கண்டு

தலை மேல் கை எதற்கு..!

வாழ்வோடு என்ன

தடுமாற்றம் உனக்கு..!

கருப்பையில் இருந்து

முட்டி மோதி

வெளிவந்தவன் தானே

உலகத்தை பார்க்க..!

விரல் காயத்திற்கு பயந்தால்

மலரை எப்படி பறிக்க....!

ஊசி முனைக்கு பயந்து

மருந்தை மறுத்தால்..

மானுடத்தை எப்படி குணமாக்க.. !

தொடர் முயற்சி

தோற்காது உனக்கு..

எல்லை கொடுக்காதே காலத்திற்கு..!

முதுகெலும்பு உள்ளவரை

முயற்சி செய்....

முடிவுக்கு வராத

வழக்குகள் பூமியில்

ஒருபோதும் இல்லை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக