செவ்வாய், 18 அக்டோபர், 2011

காதலும் கற்று நட..

 

காதல் கொண்டு

உன் பின்னே அலைவதால்

சாமானியனாய் எண்ணி சாடுகிறாய்..

காவியங்கள் பல

சாமானியனின்

காதலை தான் சுமந்தன

என்பதை மறந்துவிட்டாய் . .

மதம் கண்டு

மனமில்லை என்கிறாய் ..

வண்டுக்கும் பூக்களுக்கும் நடுவே

காற்று தடையில்லை ..

அது போலவே மதமும்..

வார்த்தைகள் தராமல்

சில நேரம்

கடந்து விடுகிறாய்... ....

மௌனத்தை மொழி பெயர்க்க

மனிதர்க்கு கற்று தந்தது

காதல் தான் என்பதை

நீ அறிந்திடவில்லை.. .

கல்யாணத்திற்கு பின் காதல்

என்பது உன் வாதம்..

.நீ கல்லறை போனாலும் கைவிடாது

என்பது காதலின் வேதம்..

இறுதியாய் ஒன்று

. மறித்து விட்ட மனிதத்தை

மலர வைக்கும் காதலை..

.கற்று நட ஒரு முறை .. .

வானளவு வெற்றி குவியும்

இனி எப்போதும் எம்முறை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக